தொடர் சரிவில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 குறைவு - இன்றைய விலை நிலவரம்?

தொடர் சரிவில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 குறைவு - இன்றைய விலை நிலவரம்?
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 6) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,280 என குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என சரிந்தது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: தங்கம் விலை மார்ச் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.920 என குறைந்தது. அதன் பின்னர் மார்ச் 3 - ரூ.1,560, மார்ச் 4 - ரூ.2,120, மார்ச் 5 - ரூ.640 என விலை குறைந்தது. இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960-க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,680-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 குறைவு - இன்றைய விலை நிலவரம்?
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா ‘தற்காலிக’ அனுமதி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in