

சென்னை: தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.2,280 குறைந்து, ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆக.14-ம் தேதியில் இருந்து விலை படிப்படியாக அதிகரித்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,280 குறைந்து, ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.285 குறைந்து, ரூ.14,725-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 512 ஆக இருந்தது.