தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் இன்று (நவ.11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என்றும், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.760 என்றும் உயர்ந்தது. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமையன்று பவுனுக்கு ரூ.360 குறைந்தது, தொடர்ந்து இன்று புதன் கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,015-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.213 குறைந்து, ஒரு பவுன் 1,13,584-க்கு விற்பனை ஆகிறது.

18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.85,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு
சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது: தப்ப முயன்ற இளைஞர் சுட்டுப் பிடிப்பு

X