

சென்னை: சென்னையில் இன்று (நவ.19) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840 ஆகவும் விற்பனை. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.10,000 வரை சரிந்ததுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவதாக நிலவும் அதிக எதிர்பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகிய காரணங்களால், தங்கத்தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வருகிறது.
இதற்கிடையில், 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (நவ.17) ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்றும் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று பவுன் விலை ரூ.2,040 குறைந்தது.
இந்நிலையில், இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840 ஆகவும் விற்பனை ஆகிறது.
அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.257 குறைந்து ரூ.13,069 ஆகவும், பவுன் விலை ரூ.2,056 குறைந்து ரூ.1,04,522 ஆகவும் விற்பனை ஆகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.180 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
இந்த விலை குறைவுப் போக்கு காரணமாக, பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம். இருப்பினும் தனிநபர்கள் தங்கள் முதலீடுகளை தேர்ந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மேற்கொள்வதே நலம் பயக்கும்.