சோனியா மீதான வாக்காளர் பட்டியல் புகார்: டெல்லி போலீஸ் அறிக்கை அளிக்க உத்தரவு

சோனியா மீதான வாக்காளர் பட்டியல் புகார்: டெல்லி போலீஸ் அறிக்கை அளிக்க உத்தரவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: சோனியா காந்தி இந்​தி​யக் குடியுரிமை பெறு​வதற்கு முன்பே வாக்காளர் பட்​டியலில் அவரது பெயர் இடம்​பெற்​றது குறித்து விகாஸ் திரிபாதி என்​பவர் 2025 ஆகஸ்​டில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு ரோஸ் அவென்யூ நீதி​மன்ற நடுவர் வினோத் ஜோஷி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. புகார்​தா​ரர் 1980, 1981, 1983-ம் ஆண்​டுகளுக்​கான சான்​றளிக்​கப்​பட்ட வாக்​காளர் பட்​டியல் நகல்களை சமர்ப்​பித்​தார்.

அவற்​றைப் பரிசீலித்த நீதிபதி, 1980-ம் ஆண்டு பட்​டியலின் அசல் சான்​றளிக்​கப்​பட்ட நகலைத் தாக்​கல் செய்​யுமாறு அவருக்கு உத்​தர​விட்​டார். மேலும், இந்​திரபிரஸ்தா எஸ்​டேட் காவல் நிலை​யம் இது​வரை எடுத்த நட​வடிக்கை குறித்து அறிக்கை தாக்​கல் செய்​ய​வும் உத்​தர​விட்டு, விசா​ரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்​திவைத்​தார்.

சோனியா மீதான வாக்காளர் பட்டியல் புகார்: டெல்லி போலீஸ் அறிக்கை அளிக்க உத்தரவு
வலுக்கும் ‘சீட்’ பகிர்வு மோதல்: உ.பி.யில் கரை சேருமா காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி?

X