இந்த ஆண்டு தங்கம் விலை 37% சரிய வாய்ப்பு: உலக தங்க கவுன்சில்

இந்த ஆண்டு தங்கம் விலை 37% சரிய வாய்ப்பு: உலக தங்க கவுன்சில்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த தங்கத்தின் விலையோடு ஒப்பிடுகையில், அது 37% வரை சரியக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,857 அமெரிக்க டாலருக்கும் கீழே குறைந்தால், அது மேலும் சரிவைச் சந்திக்கக்கூடும். அடுத்த முக்கிய ஆதரவு நிலை 3,500 டாலராக இருக்கும். ஜனவரி மாத உச்சத்தோடு ஒப்பிடுகையில், இது சுமார் 37% சரிவை குறிக்கும். தங்கத்தின் முந்தைய சரிவுகளும் இப்படித்தான் இருந்தன.

அதேநேரத்தில், ஜப்பானிய யென் நாணயம் வலுவடைந்தால் அது தங்கத்தின் விலை சரிவை மட்டுப்படுத்தும். இந்த அறிக்கை வெளியாகும் நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு சுமார் 4,063.80 டாலராக உள்ளது. லண்டன் புல்லியன் சந்தை சங்கத்தின் பிற்பகல் தங்க விலையில் ஒரு சதவீதம் சரிந்து ஒரு அவுன்சிற்கு 4,027 டாலராக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட மொத்த சரிவு 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்த நிலையில், வட்டி விகித எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும், அமெரிக்கா - ஈரான் மோதலில் ஏற்பட்ட நிகழ்வுகள் கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகளை அதிகரித்தன.

முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை மறு மதிப்பீடு செய்ததால், கோல்ட் இடிஎஃப்களில் முதலீட்டு வரத்து குறைந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் 3,943 அமெரிக்க டாலருக்கும் கீழே சென்றால், இந்த விலை வரம்பு மேலும் சரிவடையும். இதன் காரணமாக அடுத்த முக்கிய தொழில்நுட்ப ஆதரவு ஒரு அவுன்ஸிற்கு 3,857 - 3,887 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தங்கம் விலை 37% சரிய வாய்ப்பு: உலக தங்க கவுன்சில்
“இது ஒரு தொடக்கம்” - பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in