“இது ஒரு தொடக்கம்” - பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து

“இது ஒரு தொடக்கம்” - பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து
Updated on
2 min read

புதுடெல்லி: பிஹார் மற்றும் மத்தியப் பிரதேச இடைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள தோல்வி, அடுத்து அக்கட்சி பெற உள்ள தோல்விகளுக்கான தொடக்கமாக இருக்கும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, ராமர் கோயில் காணிக்கை முறைகேட்டைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிரியங்கா காந்தி பதில் அளித்தார். பிஹாரின் பங்கிபூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் டட்டியா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆளும் பாஜக தோல்வி அடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது இப்போது தெளிவாகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது ஒரு தொடக்கம் என்று நான் கருதுகிறேன்” என தெரிவித்தார்.

பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பாஜக முன்னாள் எம்பியும் மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “ஒருபுறம் அவர்கள் இளம் தலைமுறையினருக்காகவும், பெண்களின் அதிகாரம் மற்றும் இட ஒதுக்கீட்டுக்காகவும் பாடுபடுவதாகக் கூறுகிறார்கள். மறுபுறம், இதுவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இடைத் தேர்தல் பின்னணி: பிஹாரின் பங்​கிபூர், குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர், மத்​திய பிரதேசத்தின் டட்​டியா ஆகிய 3 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்றது. இதில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. பிஹாரின் பங்​கிபூர் சட்​டப்​பேரவைத் தொகு​தி​யில் பாஜக சார்​பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்​பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலை​வர் பிர​சாந்த் கிஷோர் உள்​ளிட்​டோர் போட்டியிட்டனர்.

இந்த தொகு​தி​யின் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது ஆரம்பம் முதலே பிர​சாந்த் கிஷோர் முன்​னிலை​யில் இருந்தார். அவர் 64,151 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்​கு​களும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்​பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்​கு​களும் கிடைத்​தன.

குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் ஆளும் பாஜக சார்​பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்றார். காங்​கிரஸ் வேட்​பாளர் பிக்​கா​பாய் ரபாரிக்கு 24,851 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன.

மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் கன்​ஷ்​யாம் சிங் 66,757 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்​கு​கள் கிடைத்​தன.

“இது ஒரு தொடக்கம்” - பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து
முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in