பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு: ஏற்றுமதியாளர்கள் கவலை

பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு: ஏற்றுமதியாளர்கள் கவலை
Updated on
1 min read

திருப்​பூர்: பின்னலாடை ஏற்​றும​தி, உள்​நாட்டு வர்த்​தகம் மூல​மாக ஆண்​டுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்​பூரில் வர்த்​தகம் நடை​பெற்று வரு​கிறது. பின்​னலாடை உற்​பத்​தி​யின் மூலப் பொருளான நூலின் விலையை அடிப்​படை​யாகக் கொண்டே ஆடைகளின் விலை​யும் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது.

பின்னலாடை உற்​பத்​திக்​கான நூல் விலை மாதம்​தோறும் 1 மற்​றும் 16-ம் தேதி​களில் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. இதன்​படி, மார்ச் இரண்​டாவது பகு​திக்​கான நூல் விலையை நூற்​பாலைகள் நேற்று வெளி​யிட்​டன.

இதில், பின்​னலாடைகள் உற்​பத்​திக்​கான அனைத்து வகை​யான நூல்​களின் விலை​யும், கிலோவுக்கு ரூ.7 உயர்ந்​துள்​ளது. இந்த விலை உயர்வு பின்​னலாடை உற்​பத்​தி​யாளர்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது.

இதுகுறித்து திருப்​பூர் ஏற்​றும​தி​யாளர்​கள் கூறிய​தாவது: நூல் விலை​யானது பிப்​ர​வரி மாதம் கிலோவுக்கு ரூ.7 உயர்த்த நிலை​யில், தற்​போது மேலும் ரூ.7 உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

ஏற்​கெனவே, போர் காரண​மாக ஏற்​றுமதி செய்​யப்​பட்ட பின்​னலாடைகள், வர்த்​தகர்​களுக்​குச் சென்​றடை​யாமல் பல்​வேறு இடங்​களில் தேக்​கமடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், நூல் விலை உயர்ந்​துள்​ளது.

நூல் விலை​யைக் கணக்​கிட்டே ஆடைகளின் விலையை நிர்​ண​யம் செய்​கிறோம். இந்த சூழலில் விலை உயர்ந்திருப்பது தொழிலை பெரிதும் பா​தித்​துள்​ளது. நூல் விலையை சீராக வைத்​திருக்​க மத்​தி​ய, மாநில அரசுகள்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என்​றனர்​.

பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு: ஏற்றுமதியாளர்கள் கவலை
சென்னை | கல்லூரி மாணவி இறப்புக்கு காரணமான போலீஸ்காரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in