துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு - ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்

துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு - ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்
Updated on
1 min read

துபாய்: ஈ​ரான் மீதான அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலால் துபாய் விமான நிலை​யத்​துக்கு தினந்​தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்டு வரு​வ​து தெரிய​வந்​துள்​ளது.

ஈரான் மீது அமெரிக்​க-இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் அதிரடித் தாக்​குதலை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்​கிய நிலை​யில், ஈரானும் இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா பகு​தி​யில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்​கள் மீது பதில் தாக்​குதலைத் தொடங்​கியது.

ஜோர்​டான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட நாடு​கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனி​யத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்டி இந்​தத் தாக்​குதலை அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் மேற்​கொண்​டுள்​ளன.

இந்​தப் போர்ப் ​ப​தற்​றம் காரண​மாக டிஎக்​ஸ்பி என்று அழைக்​கப்​படும் துபாய் விமான நிலை​யத்​துக்கு வரும் விமானங்​களும், புறப்​படும் விமானங்​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதனால் துபாய் விமான நிலை​யத்​துக்கு தினந்​தோறும் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்​பட்டுவரு​கிறது.

தின​மும் துபாய் விமான நிலை​யத்​துக்கு 2.60 லட்​சம் பயணி​கள் வந்து செல்​வர். தற்​போது போர்ப்​ப​தற்​றம் காரண​மாக துபாய் விமான​நிலை​யம் வெறிச்​சோடிக் கிடக்​கிறது. இதனால் விமான ​நிலை​யத்​துக்கு தினந்​தோறும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்​பட்டு வரு​கிறது.

2023-ம் ஆண்​டில் மட்​டும் 8.7 கோடி பயணி​கள் துபாய் விமான​ நிலை​யத்​துக்கு வந்து சென்​றுள்​ளனர். அதே​போல் 2025-ம் முதல் காலாண்​டில் மட்​டும் துபாய் விமான​ நிலை​யத்​துக்கு 2.34 கோடி பயணி​கள் வந்து சென்​றுள்​ளனர்.

அப்​படிப் பார்த்​தால் சராசரி​யாக தின​மும் 2.60 லட்​சம் முதல் 2.70 லட்​சம் பயணி​கள் துபாய் விமான நிலை​யத்​துக்கு வந்து செல்​கின்​றனர். கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி மட்​டும் 3.24 லட்​சம் பயணி​கள் இந்த விமான​ நிலை​யத்​துக்கு வந்து சென்​றுள்​ளனர்.

தற்​போதைய போர்ப் ​ப​தற்​றம் காரண​மாக விமான​ நிலை​யம் கடந்த சில நாட்​களாக ஆள், அரவ​மின்றி காணப்​படு​கிறது. இதனால் விமான​நிலை​யத்​துக்கு கிடைக்​கும் விமான​நிலைய கட்​ட​ணங்​கள், பயன்​பாட்​டுக் கட்​ட​ணங்​கள், வாடகை, டூட்டி ஃப்ரீ விற்​பனைக் கூடங்​கள் மூலம் வரும் வரு​வாய் முற்​றி​லும் நின்​று​விட்​டது.

உலகெங்​கிலும் இருந்து துபாய்க்கு வரும் அனைத்து சர்​வ​தேச விமான சேவை​களும் நிறுத்​தப்​பட்டு விட்​ட​தால் துபாய் வி​மான​ நிலை​யத்​துக்கு முற்​றி​லும்​ வரு​வாய்​ நின்​று​விட்​ட​தாக வி​மான ​நிலை​ய அதி​காரி​கள்​ தெரிவிக்​கின்​றனர்​.

துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு - ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்
இஸ்​ரேல் - ஈரான் போர்: சென்​னை​யில் 2-வது நாளாக 33 விமானங்​களின் சேவை ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in