‘டிபி வேர்ல்ட்’ சிஇஓ-வாக யுவராஜ் நாராயண் நியமனம்

‘டிபி வேர்ல்ட்’ சிஇஓ-வாக யுவராஜ் நாராயண் நியமனம்
Updated on
1 min read

துபாய்: ‘டிபி வேர்ல்ட்’ பன்​னாட்டு சரக்கு கன்​டெய்​னர்​கள் போக்​கு​வரத்து நிறு​வன​மாகும். இது உலகளவி​லான சரக்கு கன்​டெய்​னர் போக்​கு​வரத்​தில் 10 சதவீத பங்கு வகிக்கிறது.

இந்​நிறுனத்​தில் இயக்​குநர்​கள் வாரிய தலை​வ​ராக சுல்​தான் அகமது பின் சுல​யம் இருந்​தார். இவருக்​கும் சிறுமிகளை பாலியல் குற்​றங்​களில் ஈடு​படுத்​திய அமெரிக்​கா​வின் ஜெப்ரி எப்​ஸ்​டீனுக்​கும் தொடர்பு இருந்தது எப்​ஸ்​டீன் கோப்​பு​கள் மூலம் அம்​பல​மானது. இதையடுத்து நிறு​வனத்தை விட்டு சுல்​தான் வெளி​யேறி​னார்.

இதையடுத்து டிபி வேர்ல்ட் நிறு​வனத்​தின் புதிய தலைமை செயல் அதி​காரி​யாக (சிஇஓ) இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த யுவ​ராஜ் நாராயண் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்​நிறு​வனத்​தில் பணி​யாற்​றி​ வருகிறார். 79 நாடு​களில் செயல்படும் இந்நிறுவனத்தில் 1,15,000 பேர் பணி​யாற்​றுகின்​றனர்.

‘டிபி வேர்ல்ட்’ சிஇஓ-வாக யுவராஜ் நாராயண் நியமனம்
T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? - கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in