ம.பி. பாரம்பரிய சந்தையில் பாலிவுட் நடிகர்களின் பெயரால் கவனம் ஈர்த்த கழுதைகள்

ம.பி. பாரம்பரிய சந்தையில் பாலிவுட் நடிகர்களின் பெயரால் கவனம் ஈர்த்த கழுதைகள்
Updated on: 
1 min read

போபால்: மத்​திய பிரதேசத்​தில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் பாரம்​பரிய கழுதை சந்​தை​யில் பாலிவுட் நடிகர்​களின் பெயர் சூட்டப்​பட்ட கழுதைகள் கவனம் ஈர்த்​தன.

மத்​திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்​டத்​தில் உள்ள சித்​திரகூட் நகரில் ஒவ்​வொரு ஆண்​டும், தீபாவளி முடிந்​தவுடன் மந்​தாகினி ஆற்​றங்​கரை​யில் கழுதை சந்தை நடத்​தப்​படு​கிறது. இது வரலாறு மற்​றும் பாரம்​பரி​யத்​தின் சின்​ன​மாக​வும் விளங்​கு​கிறது. ஏனெனில், இந்​தச் சந்தை முகலாயப் பேரரசர் அவுரங்​கசீப்​பின் ஆட்​சிக் காலத்​திலிருந்தே செயல்​பட்டு வரு​வ​தாக உள்​ளூர் மக்​கள் கூறுகின்​றனர்.

அக்​காலத்​தில் ராணுவப் பொருட்​கள் மற்​றும் உணவுப் பொருட்​களைக் கொண்டு செல்​வதற்​காக கழுதைகள் பரவலாகப் பயன்​படுத்​தப்​பட்​ட​தாக நம்​பப்​படு​கிறது.

காலப்​போக்​கில், தீபாவளியை ஒட்டி இந்​தச் சந்தை நடத்​தும் பாரம்​பரி​யம் வேரூன்​றி, இன்​று​வரை தொடர்​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டும் சித்​திரகூட் நகரில் கழுதை சந்தை நேற்று முன்​தினம் நடந்​தது. மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், பஞ்​சாப் மற்​றும் ராஜஸ்​தான் உள்​ளிட்ட நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து வியா​பாரி​கள் தங்​கள் கழுதைகளு​டன் வந்​தனர். அவற்றை வாங்​கு​வதற்​காக அதி​காலை​யிலேயே சந்​தை​யில் பெருங்​கூட்​டம் திரண்​டது.

இந்த சந்​தை​யில் கழுதைகளின் உடல் தோற்​றம், அவற்​றின் விலைகள் கவனம் பெற்​றதை​விட, கழுதைகளின் பெயர்​களே பார்​வை​யாளர்​களின் கவனத்தை பெரிதும் ஈர்த்​தன. வியா​பாரி​கள் தங்​கள் கழுதைகளுக்கு பிரபல​மான பாலிவுட் பிரபலங்​களின் பெயர்​களைச் சூட்​டி​யிருந்​தனர்.

ரூ.50,000-க்கு அமிதாப், ஷாருக்

இருப்​பினும், விலை நிர்​ண​யத்​தைப் பொறுத்​தவரை, ஒரு கழுதையின் மதிப்பு அதன் இனம், உயரம், உடல் அமைப்​பு, நீளம் மற்​றும் வலிமை​யைப் பொறுத்து நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இந்த ஆண்​டு, அமி​தாப் பச்​சன், ஷாருக் கான் மற்​றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் பெயர்​களைக் கொண்ட கழுதைகள் ஒவ்​வொன்​றும் ரூ.50,000-க்​கும் குறை​வான விலைக்கு விற்​கப்​பட்​டன.

ஆனால், சங்கி பாண்டே பெயரை கொண்ட கருப்பு நிற கழுதை கடும் போட்​டிக்கு ஏலம் கேட்​கப்​பட்​டு, இறு​தி​யில் ரூ.72,000-க்கு விற்​கப்​பட்​டது. இதன் மூலம், சங்கி பாண்டே விலை​யுயர்ந்த கழுதை​யாக உரு​வெடுத்​து, அமி​தாப், மிதுன் மற்​றும் ஷாருக் ஆகிய​வற்​றை​யும்​ பின்​னுக்​குத்​ தள்​ளியது.

ம.பி. பாரம்பரிய சந்தையில் பாலிவுட் நடிகர்களின் பெயரால் கவனம் ஈர்த்த கழுதைகள்
5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...

X