இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு

பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா தகவல்
இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் எல்​பிஜி உள்​நாட்டு உற்​பத்தி ஒரு மாதத்​துக்​குள் 40 சதவீதத்​தில் இருந்து 60% ஆக உயர்ந்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய பெட்​ரோலி​யத் துறை அமைச்​சகத்​தின் இணைச் செயலர் சுஜாதா சர்மா கூறும்​போது, ‘‘இந்​தி​யா​விடம் போது​மான கச்சா எண்​ணெய் கையிருப்பு உள்​ளது. நமது சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் அவற்​றின் முழுத் திறனில் இயங்கி வரு​கின்​றன. திரவ மயமாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயு​வின் (எல்​பிஜி) உள்​நாட்டு உற்​பத்தி அதி​கரித்​துள்​ளது. இது நமது தேவை​யில் கிட்​டத்​தட்ட 60 சதவீதத்​தைப் பூர்த்தி செய்​கிறது” என்​றார்.

சமீபத்​திய தரவு​களின்​படி, 2025-26-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் வரு​டாந்​திர எல்​பிஜி நுகர்வு 3.3 கோடி டன்​களாக இருந்​தது. பிப்​ர​வரி 28-ல் வெடித்த மேற்கு ஆசி​யப் போர் காரண​மாக ஏற்​பட்ட விநி​யோகத் தடைகளால், மார்ச் மாதத்​தில் எல்​பிஜி நுகர்வு கடுமை​யாகக் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர தரவு​கள் காட்​டு​கின்​றன. போருக்கு முன்​பு, இந்​தியா தனது எல்​பிஜி தேவை​யில் 60 சதவீதத்தை இறக்​குமதி மூலம் பூர்த்தி செய்​தது. இதில் பெரும்​பகுதி மேற்கு ஆசி​யா​வில் இருந்​து, குறிப்​பாக கத்​தா​ரில் இருந்து இறக்​கும​தி​யானது.

எல்​பிஜி நுகர்வு ஜனவரி​யில் 30 லட்​சம் டன்​னாக​வும், பிப்​ர​வரி​யில் 28 லட்​சம் டன்​னாக​வும் இருந்​தது. இது மார்ச் மாதத்​தில் 23.79 லட்​சம் டன்​னாகக் குறைந்​தது. இது ஜனவரி மாதத்​துடன் ஒப்​பிடு​கை​யில் 26.6% சரி​வாகும். ஆஸ்​திரேலியா மற்​றும் அமெரிக்​கா​வில் இருந்​தும் எல்​பிஜியை இந்​தியா இறக்​குமதி செய்​கிறது.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகக் கப்​பல்​கள் செல்​லும் பாதையைத் ஈரான் தடுத்ததைத் தொடர்ந்து எல்​பிஜி இறக்​குமதி கடுமை​யாகச் சரிந்​தது. இதனால், 33.2 கோடிக்​கும் அதி​க​மான வீடு​களுக்கு 100 சதவீத எல்​பிஜி விநி​யோகத்தை உறுதி செய்​து, வர்த்தக சிலிண்​டரின் விநி​யோகத்தை மத்​திய அரசு குறைத்​தது. இதற்​கிடை​யில், எல்​பிஜி உற்​பத்​தியை அதி​கரிக்​கு​மாறு இந்​திய சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு
ஈரான் போரும் இந்தியாவின் எரிசக்தியும் | சொல்... பொருள்... தெளிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in