வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று தள்ளுவண்டியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர். படம்: பிடிஐ

பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று தள்ளுவண்டியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர். படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.29 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதிக நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக, 3 மாதங்​களில் 2-வது முறை​யாக சிலிண்டர் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

மேற்​காசி​யப் போர் காரண​மாக உலக நாடு​களுக்கு தேவை​யான எரிபொருள் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் ஏற்​படும் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் இந்​திய ரூபா​யின் மதிப்பு அடிப்​படை​யில் இந்​தி​யா​வில் பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை எண்​ணெய் நிறு​வனங்​கள் மாற்றி அமைத்து வரு​கின்​றன.

சென்னையில் விலை ரூ.957.50: இந்​நிலை​யில் நாடு முழு​வதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்​டர் விலை நேற்று ரூ.29 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதன்மூலம் டெல்​லி​யில் வீட்டு உபயோக காஸ் சிலிண்​டர் விலை ரூ.913-ல் இருந்து ரூ.942 ஆகவும் மும்​பை​யில் ரூ. 912.50-ல் இருந்து ரூ.941.40 ஆகவும் கொல்​கத்​தா​வில் ரூ.939-ல் இருந்து ரூ.968 ஆகவும் உயர்ந்​துள்​ளது.

சென்​னை​யில் ரூ.928.50 இருந்து 957.50 ஆக உயர்ந்​துள்​ளது. அரசு எண்​ணெய் நிறு​வனங்​களின் நஷ்டத்தை ஓரளவு ஈடு​செய்​வதற்​காக, கடந்த மார்ச் 7-ம் தேதி சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.60 உயர்த்​தப்​பட்​டது. இந்​நிலை​யில் 3 மாதங்​களில் இரண்​டாவது முறை​யாக தற்​போது ரூ.29 உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக பெட்​ரோலிய அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “தற்​போது 14.2 கிலோ எடை​யுள்ள சிலிண்​டரை விநி​யோகம் செய்​வதற்​கான செலவு சுமார் ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை உயர்ந்​துள்​ளது. பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் கடந்த முழு நிதி​யாண்​டில் வீட்டு உபயோக எல்​பிஜி-க்​காக சுமார் ரூ.60,000 கோடி வரை நஷ்டத்தை ஏற்​றுக்​கொண்​டன. இது அதற்கு முந்​தைய ஆண்​டின் ரூ.41,338 கோடியை விட அதி​க​மாகும். இதற்கு இழப்​பீ​டாக மத்​திய அமைச்​சரவை ரூ.30,000 கோடிக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

பாகிஸ்​தான் மற்​றும் வங்​கசேதத்தைவிட இந்​தி​யா​வில் சமையல் காஸ் சிலிண்​டர் மலி​வாக விற்​கப்​படு​வ​தாக​வும், இதனால் எண்​ணெய் நிறு​வனங்​கள் சிலிண்​டர் ஒன்​றுக்கு ரூ.700 நஷ்டத்தை சந்​திப்​ப​தாகவும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. ஈரான் போர் காரண​மாக எரிபொருள் விநி​யோகத்​துக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​ட​தால் அதன் விலை சர்​வ​தேச அளவில் உயர்ந்து வரு​கிறது. பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் மற்​றும் எல்​பிஜி ஆகிய​வற்​றின் விலை பல மடங்கு உயர்ந்​துள்​ளது. பாகிஸ்​தான் மற்​றும் வங்​கதேசத்தைவிட இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு சிலிண்​டர் குறைந்த விலைக்கு விற்​கப்​படு​வ​தாக எண்ணெய் நிறுவனங்கள் தெரி​வித்​துள்​ளன.

இந்​தி​யா​வில் 14.2 கிலோ எடை​யுள்ள எபிஜி சிலிண்​டரின் விலை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி ரூ.60 உயர்த்​தப்​பட்​டது. இதனால் சிலிண்​டர் விலை ரூ.853-ல் இருந்து ரூ.914 ஆக உயர்ந்​தது. அதன்​பின் இரண்​டாவது முறை​யாக ரூ.29 அதி​கரிக்​கப்​பட்​டது. இதனால் சிலிண்​டர் விலை ரூ.942 ஆக உயர்ந்​தது. இது​வரை ரூ.89 மட்​டுமே சமையல் காஸ் சிலிண்​டர் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஆனால் பாகிஸ்​தானில் எல்​பிஜி சிலிண்​டர் விலை ரூ.1,046, வங்​கதேசத்​தில் ரூ.1,225, அமெரிக்​கா​வில் ரூ.1,755, ஆஸ்​திரேலி​யா​வில் ரூ.1,765, கனடா​வில் ரூ.2,411 ஆக உள்​ளது.

இந்​தி​யா​வில் ஒரு சமையல் காஸ் சிலிண்​டரை விநி​யோகிக்க ரூ.1,600-க்கு மேல் செலவு ஏற்​படு​கிறது. இதனால் பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் ஒரு சிலிண்​டருக்கு சுமார் ரூ.700 இழப்பை சந்​திக்​கின்​றன. இந்​நிலை​யில் பிரதம மந்​திரி​யின் உஜ்​வாலா திட்​டத்​தின் கீழ் 10 கோடி ஏழைகளின் குடும்​பங்​களுக்கு ஆண்​டுக்கு 9 சிலிண்​டருக்கு அரசு ரூ.300 மானி​யம் வழங்கி வரு​கிறது. இதனால் அவர்​கள் சிலிண்​டர் ஒன்​றுக்கு ரூ.642 செலுத்தி வரு​கின்​றனர்​. இந்​த ​மானிய சிலிண்​டரை இந்​த நிதி​யாண்​டில்​ அரசு 4 ஆக குறைக்​க திட்​ட​மிட்​டிருந்​தது. ஆ​னால்​ இது குறித்​து பெட்​ரோலி​ய அமைச்​சகத்​தில் இருந்​து இது​வரை தெளி​வான விளக்​கம்​ வரவில்​லை என்று கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று தள்ளுவண்டியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர். படம்: பிடிஐ</p></div>
தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in