தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: தவெக அரசு மீதான குதிரை பேர முறை​கேடு புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் எம்​.சீனி​வாசன் என்​பவர் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு மீது நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதில், வெற்றி பெறு​வதற்​காக மற்ற கட்சி எம்​எல்​ஏக்​களிடம் குதிரை பேரம் நடத்​தப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.

எனவே, நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது குதிரை பேரம் நடந்​த​தாக எழுந்​துள்ள புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். மேலும், அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமார​வேல், ஜெயக்​கு​மார், சத்​தி​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர், தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​துள்​ளனர். இதையடுத்து அவர்​கள் வெற்றி பெற்ற மது​ராந்​தகம், பெருந்​துறை, தாராபுரம், அம்​பாச​முத்​திரம் ஆகிய தொகு​தி​கள் காலி​யாக உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

மக்​கள் தீர்ப்​புக்கு மாறாக, பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு வேறு கட்​சி​யில் இணைந்த 4 பேரும் தேர்​தலில் போட்​டி​யிட தடை வி​திக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில்​ கோரப்​பட்​டுள்​ளது.

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
“இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது; 23 கட்சிகள் பங்கேற்க உள்ளன”: காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in