திருப்பூரில் கட்சி சின்னம் பொறித்த வேட்டி, சேலை, துண்டுகள் விற்பனை மும்முரம்!

திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் துண்டுகள், கொடிகள்.

திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் துண்டுகள், கொடிகள்.

Updated on
1 min read

திருப்பூர்: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் சின்னம், தலைவர்கள் உருவப்படம் அச்சிடப்பட்ட வேட்டி, சேலை, துண்டுகள் தயாரிப்பு, விற்பனை சூடுபிடித்துள்ளது.

பின்னலாடை உற்பத்தி கேந்திரமான திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளன. பல்லடம், அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கி விட்டன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் தெருமுனை பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கட்சி நிகழ்வுகளுக்கு வரும் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி சின்னம், தலைவர்களின் உருவப்படம் பொறித்த துண்டுகள் மற்றும் கட்சி கொடிகள், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு விசைத்தறிக் கூடங்கள் கடந்த ஒரு மாதமாக, அரசியல் கட்சிகளின் துண்டுகள், வேட்டிகள், சேலைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் அடுத்துள்ள வெள்ளிரவெளி, பள்ளகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வண்ணங்களில் சுமார் ஒரு லட்சம் மீட்டர் துண்டு தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவதற்குள் மூன்று லட்சம் மீட்டர் துண்டுகள் தயாரித்து விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நூல் விலை அதிகரிப்பால், ரகங்களை பொறுத்து விலை சற்று மாறுபடுகிறது. கட்சி சின்னம், தலைவர்கள் உருவப்படங்கள் பொறித்த துண்டுகள், வேட்டி, சேலைகள் அனைத்தும் திருப்பூர் மாநகருக்கு மொத்த விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், இங்கிருந்து தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசைத்தறியாளர்கள் கூறுகையில், “தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் திருப் பூரில் இருந்துதான் கட்சி துண்டுகள், வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல் கட்சி கொடிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர், பிரச்சாரம் தீவிரமடையும் என்பதால் அதிக அளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றனர்.

<div class="paragraphs"><p>திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் துண்டுகள், கொடிகள்.</p></div>
சென்னை | சீரியல் நடிகை உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in