

மும்பை: இந்தியா - சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் சீன விமான நிறுவனங்களும், இந்திய விமான நிறுவனங்களும் சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் டெல்லி - ஷாங்காய் இடையே வாரத்துக்கு 3 நாட்கள் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையை தினமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் டெல்லி - ஷாங்காய் இடையே தினசரி விமானத்தை சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் இயக்குகிறது.