17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

மத்திய பட்ஜெட்டில் 17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் புற்றுநோய் மருந்துகளுக்கான விலை குறையும்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் 17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதேபோல மேலும் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவ துறை வட்டாரங்கள் கூறும்போது, “ 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு தற்போது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை குறையும். மேலும் ஹீமோபிலியா, சிக்கில் நோய், தசைநார் தேய்வு உள்ளிட்ட 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வகை நோய்களுக்கான மருந்துகளின் விலையும் குறையும்" என்று தெரிவித்தன.

17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in