யுபிஐ கட்டணத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

யுபிஐ கட்டணத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணிக ரீதியி​லான யுபிஐ பரிவர்த்தனை​களுக்கு 0.4% வரை வணி​கக் கட்​ட​ணம் (எம்​டிஆர்) விதிக்க மத்​திய அரசு அனு​மதி அளித்​தது. இதனை எதிர்த்து அஞ்சன் தத்தா என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்கல் செய்​தார். அதில், யுபிஐ பணப் பரிவர்த்​தனை​களுக்கு அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள கட்​ட​ணங்​கள் சாமானிய மக்​களைப் பாதிக்கும்.

குறிப்​பாக வணிக நிறு​வனங்​கள் இந்​தக் கூடு​தல் செல​வு​களை நுகர்​வோர் மீது சுமத்​தக்​கூடும். எனவே,் புதிய நடை​முறையை ரத்து செய்ய வேண்​டும் என கோரி​யிருந்​தார். இந்த மனு உச்​சநீ​தி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, இடைக்​காலத் தடை விதிக்க மறுத்​து​விட்​டது.

யுபிஐ கட்டணத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
யாருக்காவது ரூ.2,500 வந்திருக்கிறதா? - தவெக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு பிரேமலதா கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in