யாருக்காவது ரூ.2,500 வந்திருக்கிறதா? - தவெக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு பிரேமலதா கேள்வி

மதுராந்தகம் நெல்வாய் இணைப்பு சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

மதுராந்தகம் நெல்வாய் இணைப்பு சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: மது​ராந்​தகம் அடுத்த நெல்​வாய் இணைப்பு சாலை பகு​தி​யில் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, தவெக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​யாக தெரிவிக்​கப்​பட்ட ரூ.2,500 யாருக்​காவது வந்​துள்​ளதா என கேள்வி எழுப்​பி​னார்.

மேலும் அவர் பேசி​ய​தாவது: இடைத்​தேர்​தலில் திமுக வேட்​பாள​ருக்கு ஆதர​வாக நான் பிரச்​சா​ரம் செய்​வதற்கு எதிர் தரப்​பில் உள்​ளவர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். மக்​கள் பிரச்​சனையை பற்றி மட்​டும்​தான் உதயநிதி பேசி​னார். ஆனால், ஆதவ் அர்​ஜூனா தேவை​யில்​லாமல் பதவி வில​கு​வீர்​களா என பேசி வரு​கிறார். இடைத்​தேர்​தலில் நிச்​சய​மாக திமுக வெற்றி பெறும். பேசுவதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா யோசனை செய்து பேச வேண்​டும்.

மது​ராந்​தகம் மக்​கள் துரோகத்​துக்கு துணை​யாக நிற்​க​மாட்​டார்​கள். மது​ராந்​தகம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் வந்​ததற்கு காரணம் என்​னவென்று உங்​களுக்கு தெரி​யும். வாக்​களித்த மக்​களுக்கு துரோகம் இழைத்​து​விட்​டு, தற்​போது மீண்​டும் வாக்கு சேகரிக்க தவெக வேட்​பாளர்​கள் வரு​கிறார்​கள். முதல்​வர் விஜய் ரூ.2,500 வழங்​கு​வ​தாக வாக்குறுதி அளித்தார். யாருக்​காவது அந்தப் பணம் வந்​திருக்​கிற​தா. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>மதுராந்தகம் நெல்வாய் இணைப்பு சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.</p></div>
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: 108 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய் விலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in