பெங்களூருவில் வர்த்தக சிலிண்டர் ரூ.10,000-க்கு விற்பனை: உணவகங்கள், விடுதிகள் கடும் பாதிப்பு

பெங்களூருவில் வர்த்தக சிலிண்டர் ரூ.10,000-க்கு விற்பனை: உணவகங்கள், விடுதிகள் கடும் பாதிப்பு
Updated on
1 min read

பெங்களூரு: பெங்​களூரு​வில் வணிக பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் தட்​டுப்​பாடு காரண​மாக கள்ளச் சந்​தை​யில் ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்​டர் ரூ.10 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்யப்படு​கிறது.

ஈரான், இஸ்​ரேல், அமெரிக்கா ஆகிய நாடு​களுக்கு இடையே போர் காரண​மாக எரிபொருள் விநி​யோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்​ளது. இதன் காரண​மாக பெங்​களூரு​வில் வணிக நிறு​வனங்​களுக்கு வணிக‌ பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் வழங்​கு​வது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்​றுக்​கணக்​கான உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. பெரும்​பாலான உணவகங்​களில் விற்​பனை செய்​யப்​படும் பண்​டங்​களின் எண்​ணிக்கை பெரு​மள​வில் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரு​வில் இயங்​கி வரும் ஆயிரக்​கணக்​கான தங்​கும் விடுதிகளில் உணவு தயாரிக்​கும் பணி​கள் வெகு​வாக பாதிக்கப்பட்​டுள்​ளது. இதனால் அவற்றில் தங்​கி​யுள்ள லட்​சக்​கணக்​கானவர்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர். உணவகங்​கள், தங்​கும் விடு​தி​கள் விறகு, மின்​சார அடுப்பு மூலம் உணவு சமைக்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளன.

சிலிண்​டர் தட்​டுப்​பாடு நில​வும் அதே சூழலில், கள்ளச் சந்​தை​யில் சிலிண்​டர் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. வணிக‌ பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு உதவும் சிலிண்​டர் ரூ.4 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக கூறப்படுகிறது.

இந்​நிலை​யில் கர்​நாடக உணவு மற்​றும் விநி​யோகத் துறை அமைச்​சர் கே.எச்​.​முனியப்பா நேற்று பெங்​களூரு​வில் இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், கெயில் எரி​வா​யு, ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் உள்​ளிட்ட எரிபொருள் நிறு​வனங்​களு​டன் அவசர ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

இந்த கூட்​டத்​துக்கு பின்​னர் அமைச்​சர் கே.எச்​.​முனியப்பா கூறுகை​யில், “கர்​நாடகா​வுக்கு நாளொன்​றுக்கு 50 ஆயிரம் வணிக பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் தேவைப்​படு​கின்​றன. 3.5 லட்​சம் வீட்டு உபயோக சிலிண்​டர்​கள் தேவைப்​படு​கின்​றன. தற்​போது இருப்பை கவனத்​தில் கொண்டு, எரிவாயு மற்றும் எரி பொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகளுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்கப் படுகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர் போதுமான இருப்பு உள்ளதால், பொது மக்கள் அதிக‌ளவில் முன்பதிவு செய்ய வேண்டாம்" என்றார்.

பெங்களூருவில் வர்த்தக சிலிண்டர் ரூ.10,000-க்கு விற்பனை: உணவகங்கள், விடுதிகள் கடும் பாதிப்பு
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in