அண்ணா பிறந்த நாளையொட்டி 139 நாட்களுக்கு பருத்தி, பட்டு ஆடைகளுக்கு கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி

அண்ணா பிறந்த நாளையொட்டி 139 நாட்களுக்கு பருத்தி, பட்டு ஆடைகளுக்கு கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் அண்​ணா​வின் பிறந்​த​நாளை முன்​னிட்டு 139 நாட்​களுக்கு பருத்தி மற்​றும் பட்டு ஆடைகள் 30 சதவீத தள்​ளு​படி விலை​யில் விற்​பனை செய்​யப்பட உள்​ள​தாக கோ-ஆப்​டெக்ஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாளை சிறப்​புடன் கொண்​டாடும் வகை​யில், செப்​டம்​பர்

15-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன. 31-ம் தேதி வரை 139 நாட்​களுக்கு பட்டு மற்​றும் பருத்தி ரகங்​களுக்கு, ஆண்டு முழுவதும் வழங்கப்படும் 20 சதவீத தள்ளுபடியுடன் கூடு​தலாக 10 சதவீதம் சிறப்​புத் தள்​ளு​படி வழங்​கப்​படும்.

இதன்​மூலம் 139 நாட்​களும் பட்டு மற்​றும் பருத்தி ரகங்​களுக்கு 30 சதவீதம் தள்​ளு​படி வழங்​கப்​படும். பொது​மக்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்தி தரமான பட்டு மற்​றும் பருத்தி துணி​களை சிறப்​புத் தள்​ளு​படி விலை​யில் வாங்​கி, கைத்​தறிப் பொருட்​களுக்கு ஆதர​வளிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

அண்ணா பிறந்த நாளையொட்டி 139 நாட்களுக்கு பருத்தி, பட்டு ஆடைகளுக்கு கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி
விஜய் முதலமைச்சர் ஆனதில் மகிழ்ச்சி: அஜித் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in