

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜன.5) தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜன.3) காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,160-க்கும் விற்பனையானது.
ஆனால், அன்றைய மாலை வேளையில் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800-க்கும், விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் வர்த்தகம தினமான இன்று (ஜன.5) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,01,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்கப்படுகிறது.