உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம்

மத்திய நிதி சேவைகள் துறை செயலாளர் தகவல்
உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் உரிமை கோரப்படா​மல் உள்ள நிதி சொத்துகளை மீட்க விரை​வில் ஒருங்​கிணைந்த இணை​யதளம் தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பரஸ்பர நிதி உள்​ளிட்ட நிறு​வனங்​களில் பொது ​மக்​களின் உரிமை கோரப்​ப​டாத நிதி சொத்​துகள் ஏராள​மாக உள்​ளன.

இந்த நிதி சொத்துகளை பொது​மக்​கள் மீட்​ப​தற்​கு, டெப்​பாசிட்​டர் கல்வி மற்​றும் விழிப்​புணர்வு நிதி என்ற திட்​டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்​மூலம் இது​வரை உரிமை கோரப்ப​டா​மல் இருந்த ரூ.1,887 கோடி உரிய​வர்​களிடம் திருப்பித்தரப்​பட்​டுள்​ளது. அதே​நேரம் இன்​ன​மும் ரூ.3,201 கோடி உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய நிதியமைச்​சகத்​தின் கீழ் இயங்கும், நிதி சேவை​கள் துறை ரிசர்வ் வங்​கி​யுடன் இணைந்து உரிமை கோரப்​ப​டாத தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​பதை விரைவுபடுத்துவதற்​காக, ஒருங்​கிணைந்த இணை​யதளம் தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளது.

பஞ்​சாப் நேஷனல் வங்​கி​யின் சார்​பில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், மத்​திய நிதி சேவை​கள் துறை செய​லா​ளர் ​நாக​ராஜு பேசும்​போது, “நாடு முழு​வதும் உள்ள வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பரஸ்பர நிதி உள்​ளிட்ட நிறு​வனங்​களில் உரிமை கோரப்​ப​டா​மல் உள்ள நிதி சொத்​துகளை தேடி கண்​டு​பிடித்து மீட்ப​தற்​காக, ஒருங்​கிணைந்த இணை​யதளம் விரை​வில் தொடங்கப்படும்.

உரிமை கோரப்​ப​டா​மல் உள்ள பல்​வேறு நிதி சொத்துகளை ஒரே தளத்​தின்​ மூலம்​ (ஒற்​றைச்​ ​சாளரம்​) எளி​தாக மீட்​க இது உறு​துணை​யாக இருக்​கும்​"என்​றார்​.

உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம்
பங்குச் சந்தை வர்த்தக மோசடியில் ரூ.35 கோடியை இழந்த மும்பை முதியவர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in