மின்னணு மூலப் பொருட்களுக்கு சுங்க வரியை நீக்கியது மத்திய அரசு

மின்னணு மூலப் பொருட்களுக்கு சுங்க வரியை நீக்கியது மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: ஸ்​மார்ட்​போன்​கள், லேப்​டாப்​கள் மற்​றும் ஸ்மார்ட் டிவி உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​களின் உள்​நாட்டு உற்​பத்​தியை பெரு​மள​வில் ஊக்​குவிக்​கும் நோக்​கில், அவற்​றின் முக்​கிய மூலப்​பொருட்​களுக்​கான அடிப்​படை சுங்க வரியை மத்​திய அரசு முழு​மை​யாக ரத்து செய்​துள்​ளது.

குறிப்​பாக, டிஸ்ப்ளே திரைகள், லித்​தி​யம் அயன் பேட்​டரி செல்​கள் மற்​றும் கம்​பி​யில்லா சார்​ஜிங் தொழில்​நுட்ப பாகங்​கள் தயாரிப்புக்​கான உற்​பத்​திச் செலவு குறைந்து உள்​நாட்டு மின்னணு சுற்​றுச்​சூழல் அமைப்பு பலப்​படும் என எதிர்பார்க்கப்படு​கிறது.

இது தொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சகம் இந்த வரி விலக்கு உடனடி​யாக அமலுக்கு வரு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளது. மத்​திய அரசின் இந்த வரி விலக்கு சலுகை​யானது, உள்​நாட்டு மின்​னணு உற்​பத்​தியை ஊக்​கு​விப்​ப​தற்​காகக் கொண்டு வரப்​பட்ட உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத்​தொகை (பிஎல்ஐ) திட்​டத்​திற்கு வலுசேர்க்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. இந்த சுங்க வரி நீக்​கத்​தின் மூலம், பிற நாடு​களி​லிருந்து இறக்​குமதி செய்​வதைக் குறைத்​து, உள்​நாட்டு உற்​பத்​தி​யுடன் கூடிய வலு​வான மின்​னணு சுற்​றுச்​சூழல் அமைப்பை உரு​வாக்க முடி​யும் என்று அரசு நம்​பு​கிறது.

டிஸ்ப்ளே திரைகள் மற்​றும் கம்​பி​யில்லா சார்​ஜிங் தொழில்​நுட்​பத்​திற்​குப் பயன்​படும் மின்​சுருள் தொகுப்பு போன்​றவை​களின் தயாரிப்​பிற்​கான மூலப்​பொருட்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள இந்த வரி விலக்கு சலுகை​யானது வரும் 2029-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை செல்​லுபடி​யாகும் என அந்த அறிவிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இது குறித்து ஏஎம்​ஆர்ஜி குளோபல் நிறு​வனத்​தின் மேலாண்​மைப் பங்​கு​தா​ரர் ரஜத் மோகன் கூறுகை​யில், மொபைல் மற்​றும் மின்​சார வாகன பேட்​டரி தயாரிப்பு இயந்​திரங்​களுக்கு இது​வரை தனித்​தனி​யாக இருந்த சுங்க வரி விலக்​கு​களை அரசு தற்​போது ஒன்​றாக இணைத்​துள்​ளது. தொழில்​நுட்ப வேறு​பாடின்றி அனைத்து வகை​யான ‘லித்​தி​யம் அயன் செல்​கள்’ தயாரிக்​கும் இயந்​திரங்​களுக்​கும் பொருந்​தும் வகை​யில் இந்த ஒற்றை வரி விலக்கு முறை கொண்டு வரப்​பட்​டுள்​ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய மாற்​றம் சுங்க வரி விதிப்பு முறையை எளிமை​யாக்​கு​வதுடன், இறு​திப் பயன்​பாடு சார்ந்த குழப்​பங்​களை நீக்​கி, உற்பத்தி​யாளர்​களின் விதி​முறை இணக்​கச் சுமை​யை​யும், சட்ட விளக்​கக் குழப்​பங்​களை​யும் கணிச​மாகக் குறைக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார்.

மேலும், இந்த திருத்​தம் உள்​நாட்டு லித்​தி​யம் அயன் செல் தயாரிப்பில் புதிய முதலீடுகளை ஈர்க்​கும் என்​றும், ஒருங்கிணைந்த உற்​பத்தி ஆலைகளைக் கொண்ட நிறுவனங்களுக்​குப் பெரிய இணக்க​மான சூழல் ஏற்​படும் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதன் மூலம் பிரம்​மாண்ட பேட்​டரி உற்​பத்தி ஆலைகள், மின்​சார வாகன உற்​பத்​தி​யாளர்​கள், நுகர்​வோர் மின்​னணு நிறு​வனங்​கள் மற்​றும் ட்ரோன் தயாரிப்பு நிறு​வனங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு துறை​யினர் பெரும் பயனடை​வார்​கள் என்​றும் ரஜத் மோகன் கூறினார்.

மின்னணு மூலப் பொருட்களுக்கு சுங்க வரியை நீக்கியது மத்திய அரசு
“வளர்ந்த நாடாக இந்தியா மாற உழைக்கிறோம்” - ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in