ரூ.3,000 கோடி வங்​கிக் கடன் மோசடி: அனில் அம்பானியிடம் சிபிஐ தீவிர விசா​ரணை

ரூ.3,000 கோடி வங்​கிக் கடன் மோசடி: அனில் அம்பானியிடம் சிபிஐ தீவிர விசா​ரணை
Updated on
1 min read

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்​தியா (எஸ்​பிஐ) வங்கியில் ரூ. 2,929 கோடி கடன் மோசடி செய்​த​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில், பிரபல தொழில​திபர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்கொண்​டனர்.

ரிலை​யன்ஸ் கம்​யூனி கேஷன்ஸ் நிறு​வனம் மற்​றும் அதன் தலை​வர் அனில் அம்​பானிக்கு எதி​ராக எஸ்​பிஐ அளித்த புகாரின் அடிப்​படை​யில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்​ளது. டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​திற்கு வியாழக்​கிழமை காலை வந்த அவரிடம் அதி​காரி​கள் வங்​கிக் கடன் மோசடி குறித்து விரி​வான விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்​பானி மற்​றும் அவரது ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்ஸ் நிறு​வனத்​தின் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​தது. வங்​கி​யில் பெற்ற கடன் தொகையை முறை​கே​டாகப் பயன்​படுத்​தி​யது, நிதி மற்​றும் கணக்​கு​களில் முறை​கேடு செய்​தது உள்​ளிட்ட புகார்​கள் அவர் மீது சுமத்​தப்​பட்​டுள்​ளன.

எஸ்​பிஐ வங்​கி​யின் புகாரின்​படி, 2018-ம் ஆண்டு புள்​ளி​விவரங்​களின் அடிப்​படை​யில் அந்த நிறு​வனத்​திற்​குப் பல்வேறு வங்​கி​கள் மூலம் ரூ.40,000 கோடிக்கு மேல் கடன் நிலுவை உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இதில் பொதுத்​துறை நிறு​வன​மான எஸ்​பிஐ வங்​கிக்கு மட்​டும் ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​பட்டுள்​ளது.

அனில் அம்​பானி தரப்பு விளக்​கம் அனில் அம்பானி தன் மீதான அனைத்​துக் குற்​றச்​சாட்​டு​களை​யும் மறுக்​கிறார். சட்​டப்​படி இதனை அவர் எதிர்​கொள்​வார் என்று அனில் அம்​பானியின் செய்​தித் தொடர்​பாளர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ரூ.3,000 கோடி வங்​கிக் கடன் மோசடி: அனில் அம்பானியிடம் சிபிஐ தீவிர விசா​ரணை
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in