யுபிஐ அறிமுகம் செய்த 9-வது நாடு கம்போடியா

யுபிஐ அறிமுகம் செய்த 9-வது நாடு கம்போடியா
Updated on
1 min read

புதுடெல்லி: க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்​தும் யுபிஐ நடைமுறையை இந்​தியா அறி​முகம் செய்​தது. இது சிங்​கப்​பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்​ஸ், மொரீசி​யஸ், நேபாளம், பூட்டான், இலங்கைக்கு விரிவு படுத்​தப்​பட்​டது. தற்​போது 9-வது நாடாக கம்போடி​யா​வில் அறிமுகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்​காக நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆஃப் இந்​தி​யா, ஏசிஎல்​இடிஓ பேங்க் பப்​ளிக் லிமிடெட் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இதன் மூலம் கம்​போடியா செல்​லும் இந்​திய சுற்றுலா பயணி​கள் அங்​குள்ள 45 லட்​சம் கடைகளில் பணம் செலுத்​தலாம். இதற்கு முன்பு வெளி​நாடு செல்​லும் சுற்​றுலா பயணி​கள், இந்​திய ரூபாயை வெளி​நாட்டு கரன்​சிகளாக மாற்றி செலவு செய்​வ​தில் பல சிரமங்​களை அனுப​வித்​தனர்.

தற்​போது யுபிஐ முறை பல நாடு​களுக்கு விரிவுபடுத்​தப்​பட்டு வருவ​தால், இந்​தி​யர்​களுக்கு பணம் செலுத்​து​வது எளி​தாகி உள்ளது. அவர்​கள் வாங்​கும் பொருட்​களுக்கு நிக​ரான ரூபா​யின் மதிப்பை அறிந்து வங்கி கணக்கு மூல​மாக பணம் செலுத்​தலாம்.

தற்​போது முதல் கட்​ட​மாக இந்​தி​யர்​கள் கம்​போடி​யா​வில் யுபிஐ மூலம் பணம் செலுத்​தும் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. அடுத்​த​தாக கம்​போடியா மக்​கள் இந்​தி​யா​வில் யுபிஐ மூலம் பணம் செலுத்​தும் முறை கொண்​டுவரப்​படவுள்​ளது.

யுபிஐ அறிமுகம் செய்த 9-வது நாடு கம்போடியா
டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் உட்பட 23 கட்சிகள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in