கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்

கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
Updated on
1 min read

சென்னை: கடந்த நிதி ஆண்​டில் பெல் நிறு​வனம் ரூ.32,350 கோடி வரு​வாய் ஈட்டி சாதனை படைத்​துள்​ள​தாக அந்​நிறு​வனத்​தின் செயல் இயக்​குநர் வினோத் ஜேக்​கப் சாம் தெரி​வித்​தார்.

நாட்​டின் 80-வது சுதந்​திர தினம் சென்​னை​யில் உள்ள பாரத மிகுமின் நிறுவன (பெல்) அலு​வல​கத்​தில் கடந்த சனிக்​கிழமை உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது.

அந்​நிறு​வனத்​தின் செயல் இயக்​குநர் வினோத் ஜேக்​கப் சாம் தேசி​யக்​கொடியை ஏற்​றி​வைத்து பேசி​ய​தாவது: கடந்த 2025-2026-ம் நிதி ஆண்​டில் பெல் நிறு​வனம் சிறப்​பாக செயல்​பட்டு ரூ.32,350 கோடி வரு​வாய் ஈட்​டியது.

இது முந்​தைய ஆண்​டுடன் ஒப்​பிடு்​போது 18 சதவீதம் அதி​கம் ஆகும். புதிய ஆர்​டர் வரவு ரூ.75 ஆயிரம் கோடி​யாக இருந்​தது. தற்​போது நிலு​வை​யில் இருக்​கும் மொத்த ஆர்​டர்​களின் மதிப்பு ரூ.2.4 லட்​சம் கோடி​யாக உள்​ளது.

இதில் ஏறத்​தாழ ரூ.59 ஆயிரம் கோடி மின் பிரி​வில் இருந்​தும், ரூ.16 ஆயிரம் கோடி தொழில் பிரி​விலிருந்​தும் பெறப்​பட்ட ஆர்​டர்​கள் ஆகும். மேலும், கடந்த நிதி ஆண்​டில் சுமார் 8.9 ஜிகா​வாட் மின் உற்​பத்​தித்​திறன் நிறு​வப்​பட்டு மின் இணைப்​புடன் செயல்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டது.

ஜார்​சு குடா நிலக்​கரி வாயு​வாக்க திட்​டம் பெல் நிறு​வனத்​தின் உள்​நாட்டு தொழில்​நுட்​பத்தை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​படுத்​தப்​படும் முதல் வணிக ரீதியி​லான திட்​ட​மாகும்.

வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில்​களுக்​கான செமி-ஸ்​பீடு டிராக்​சன் கன்​வெர்ட்​டர்​கள் மற்​றும் டிராக்​சன் மின்​மாற்​றிகளை​யும் பெல் நிறு​வனம் வழங்​கத் தொடங்​கி​யுள்​ளது.

இதன்​மூலம் மேம்​பட்ட போக்​கு​வரத்து தொழில்​நுட்​பங்​களில் நம் நாட்​டின் தற்​சார்பை வலுப்​படுத்​து​வ​தில் பெல் நிறு​வனம் தனது பங்​களிப்பை மேலும் அதி​கரித்​துள்​ளது.

பெல் நிறு​வனத்தை மேலும் போட்​டித்​திறன் மிக்​க​தாக​வும் இந்​தி​யாவை மேலும் தற்​சார்பு கொண்ட நாடாக​வும் உரு​வாக்க அனைத்து ஊழியர்​களும் பாடுபட வேண்​டும். வலிமை​யான மற்​றும் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தி​லும் தொடர்ந்து பங்​களிப்பை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டு திட்டம்: விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in