டெல்லியில் தடையற்ற சுங்கச் சாவடி: அமைச்சர் கட்கரி திறந்து வைத்தார்

டெல்லியில் தடையற்ற சுங்கச் சாவடி: அமைச்சர் கட்கரி திறந்து வைத்தார்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​கள் நிற்​காமல், வேகத்​தடை இன்றி கடந்து செல்ல உதவும் பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை, குஜ​ராத்​தில் உள்ள பரூச் சுங்கச் சாவடியில் முதன்​முறை​யாக அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நகர்ப்​புற விரி​வாக்​கச் சாலை 2 -ல் அமைந்​துள்ள முண்ட்​கா-பக்​கர்​வாலா சுங்​கச்​சாவடி​யில் 'பல​வழி தடையற்ற சுங்​கக் கட்டண வசூல்' முறையை மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் அமைச்​சர் நிதின் கட்​கரி பேசுகை​யில், "இந்த எம்​எல்​எப்​எப் அமைப்பு சுங்​கக் கட்​ட​ணத்தை தானாகவே வசூலிப்​பது மட்​டுமல்​லாமல், சீட்​-பெல்ட் அணி​யாமல் இருத்​தல், வாக​னம் ஓட்டும்​போது செல்​போனில் பேசுதல் மற்​றும் பிற போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்கு சலான்​களை வழங்​க​வும் உதவும். இந்த அமைப்பு காலப்​போக்​கில் பரந்த அளவி​லான போக்​கு​வரத்து அமலாக்​கத் தொழில்​நுட்​பங்​களு​டன் ஒருங்​கிணைக்​கப்​படும்" என்றார்.

இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் தலை​வர் சந்தோஷ் குமார் யாதவ் கூறுகை​யில், “இந்த ஆண்டு டிசம்​பர் இறுதிக்​குள், நாடு முழு​வதும் சுமார் 1,300 சுங்​கச்​சாவடிகளில் இந்தத் தொழில்​நுட்​பத்தை செயல்​படுத்த அரசு திட்​ட​மிட்​டுள்​ளது’’ என்​றார்​.

டெல்லியில் தடையற்ற சுங்கச் சாவடி: அமைச்சர் கட்கரி திறந்து வைத்தார்
பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உடைகிறதா அதிமுக?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in