இண்டிகோ விமான சேவை ரத்து எதிரொலி: டெல்லி - சென்னை டிக்கெட் விலை ரூ.80,000 ஆக உயர்வு!

இண்டிகோ விமான சேவை ரத்து எதிரொலி: டெல்லி - சென்னை டிக்கெட் விலை ரூ.80,000 ஆக உயர்வு!
Updated on
1 min read

இந்தியா முழுவதும் செயல்படும் இண்டிகோ விமான நிறுவனத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் விதிமுறைகள் தொடர்பான சிக்கல்களால் கடந்த சில நாட்களாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகளும் விமான நிலையங்களில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1000+ இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதம் ஏற்பட்டது.

இந்த சிக்கல் காரணமாக, மாற்று விமானங்களைத் தேடும் பயணிகள் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு செல்ல, கடைசி நேர விமான டிக்கெட் கட்டணம் ரூ.70,000 வரை உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ரூ.40,000 வரையிலும், டெல்லியில் இருந்து மும்பைக்கு ரூ.36,000-க்கு மேல் அதிகபட்சமாக ரூ.56,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டெல்லி - சென்னை வழித்தடத்தில் டிக்கெட் கட்டணம் ரூ.62,000 முதல் ரூ.82,000 வரை எட்டியுள்ளதாக புக்கிங் இணையதளங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் தற்போது சர்வதேச விமானப் பயணக் கட்டணங்களை விட அதிகமாக உள்ளன. உதாரணமாக, டெல்லி - துபாய் விமான டிக்கெட்டை ரூ.15,000-க்கு கிடைக்கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்து சிக்கலால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை படிப்படியாகக் குறைந்து, விமான சேவை சனிக்கிழமை முதல் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமான சேவை ரத்து எதிரொலி: டெல்லி - சென்னை டிக்கெட் விலை ரூ.80,000 ஆக உயர்வு!
‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in