விழிஞ்சத்தில் அதானி நிறுவனம் மேலும் ரூ.16,000 கோடி முதலீடு

விழிஞ்சத்தில் அதானி நிறுவனம் மேலும் ரூ.16,000 கோடி முதலீடு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் துறைமுகத்தை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் கடந்தாண்டு முதல் இயக்கி வருகிறது. இங்கு 2-ம் கட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.16,000 கோடியை அதானி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

கப்பலில் உள்ள சரக்குகளை துறைமுகத்தில் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் 21 தானியங்கி கிரேன்கள், தண்டவாளத்தில் இயங்கும் 45 தானியங்கி கிரேன்கள் செயல்படும். துறைமுகத்தின் தற்போதைய கையாளும் திறன் 4.1 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரிக்கும். இங்கு அனைத்து எலக்ட்ரிக் தானியங்கி கருவிகளும் நவீனமாக்கப்படவுள்ளன. துறைமுகத்தின் கையாளும் திறனை அதிகரிக்க 920 மீட்டர் நீளம், 21 மீட்டர் ஆழத்தில் புதிய கட்டுமானங்களும் விழிஞ்சம் துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ளன.

விழிஞ்சத்தில் அதானி நிறுவனம் மேலும் ரூ.16,000 கோடி முதலீடு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 4-வது சுற்றில் சின்னர், மேடிசன் கீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in