யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகெதோஷி யமமோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகெதோஷி யமமோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: இசைக் ​கருவி தயாரிப்பு நிறு​வன​மான யமஹா மியூசிக் இந்​தி​யா, இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை தனது விளம்​பரத் தூத​ராக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது.

இந்​தி​யா​வின் முன்​னணி இசைக்​ கருவி நிறு​வன​மாகத் திகழ்ந்து வரும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின், விளம்​பரத் தூதருக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​திடும் நிகழ்ச்சி தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனம், தனது விளம்​பரத் தூத​ராக இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை அறி​வித்​தது.

இதற்​கான ஒப்​பந்​தத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் மற்​றும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் டகெதோஷி யமமோட்டோ ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

பின்​னர், நிகழ்ச்​சி​யில் ஏ.ஆர்​.ரஹ்மான் பேசி​ய​தாவது: எனது 12 வயதில் இருந்தே யமஹா இசைக் ​கருவி​கள் எனது இசைப் பயணத்​தின் ஓர் அங்​க​மாக இருந்து வரு​கின்​றன.

அப்​படி 1973-ல் தொடங்​கிய பயணம், ஆர்​கன்​கள், மியூசிக் கம்​யூட்​டர்​களி​லிருந்து தற்​போது பயன்​படுத்​தும் மான்​டேஜ் சி7 பியானோக்​கள் வரை தொடர்​கிறது.

இந்த ஸ்பான்​சர்​ஷிப் மூலம், எனது இசைப் ​பள்​ளி​யும் யமஹா இசைக்​ கருவி​களை பயன்​படுத்​தும் வாய்ப்பை தற்​போது பெற்​றுள்​ளது.

இங்கு மாணவர்​களுக்கு சிறந்த தரமான இசைக்​ கருவி​கள் கிடைக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்​தேன். இந்​திய மாணவர்​கள் உலகத் தரத்​தில் ஜொலிக்க வேண்​டும்.

சென்​னை கலை தலைநகரம்

சென்​னையை உலகின் கலைத் தலைநகர​மாக மாற்ற வேண்​டும் என்​பது என் கனவு. இதற்​காக எங்​களது பள்​ளி​யில் இசைக்​குழுவை உரு​வாக்கி வரு​கிறோம்.

இன்​றைய காலத்​தில் ஏஐ மூலம் பாடல்​களை உரு​வாக்​கலாம். ஆனால் ஒரு மனிதன் மேடை​யில் பாடும்​போதும், இசையை வாசிக்​கும்​போதும் கிடைக்​கும் நேரடி அனுபவம் மிக​வும் மதிப்​புமிக்​க​தாகும்.

ஏஐ தொழில்​நுட்​பத்​தால் ஒரு​போதும் மனித உணர்​வு​களைப் பிர​திபலிக்க முடி​யாது. காலங்​கள் மாறி​னாலும் மனித உணர்​வு​களுக்​கான மதிப்பு அதி​கரிக்​கவே செய்​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் டகெதோஷி யமமோட்டோ பேசுகை​யில், “யமஹா வெறும் இசைக்​ கருவி​களை விற்​பனை செய்​யும் நிறு​வனம் மட்​டுமல்ல, இசை​யின் மூலம் மக்​களின் தனித்​து​வத்தை வெளிப்​படுத்​தும் ஒரு கரு​வி​யாகும்.

யமஹாவுக்கு இந்​தி​யச் சந்தை மிக​வும் முக்​கிய​மானது. இந்​தி​யா​வில் இசைக் கல்​வியை ஊக்​கு​விப்​பது மற்​றும் உயர்தர இசைக் ​கருவி​களை அனைத்து தரப்பு மக்​களுக்​கும் கொண்டு சேர்ப்​பதே எங்​களது நோக்​கம்.

அந்த வகை​யில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை விளம்​பரத் தூத​ராக நியமித்​திருப்​பது இசை​யின் மூலம் தங்​களை வெளிப்​படுத்​திக் கொள்ள நினைக்​கும் இளைஞர்​களை ஊக்​கப்​படுத்​தும் என நம்​பு​கிறோம்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் விற்​பனைப் பிரிவு தலை​வர் ரியோஜி மரு​யா​மா, இசையமைப்​பாளர் குல்​ராஜ் சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகெதோஷி யமமோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். | படம்: <em>எஸ்.சத்தியசீலன்</em> |</p></div>
இருவேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை: 44 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 இளைஞர்கள் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in