மே 17, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

மே 17, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 17) சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.45,360-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 ஆம் தேதி அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கடந்த நான்கு நாட்களாக தங்கம் எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் தொடர்ந்து வந்தது.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,200-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,200-ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in