Published : 22 Apr 2023 04:13 AM
Last Updated : 22 Apr 2023 04:13 AM

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதர் நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா

சென்னை: கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ராஷ்மிகா மந்தனாவை விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் நம்பகமானதும் முன்னணி ஜூவல்லரி நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸின் லைஃப் ஸ்டைல் பிரிவை பிரதிநிதித்துவப் படுத்தும் விதமாக தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையான ராஷ்மிகா நியமனம் குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைமை இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன் கூறும்போது, "தெலுங்கு, கன்னடம், தமிழ்நாடு சந்தைகளுக்கான எங்களது பிராண்டுக்கான விளம்பரத்தூதராக ராஷ்மிகா மந்தனாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து, எங்களது லைஃப் ஸ்டைல் பிரிவுக்கான பிரதிநிதியாக இவரும் விளங்குவார். இந்த அறிவிப்பின் மூலமாக, ஏற்கெனவே கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் இணைந்துள்ள மிகவும் நன்கு அறியப்பட்ட பிரபலங்களான அமிதாப் பச்சன் (சர்வதேச விளம்ப தூதர்), கத்ரீனா கைஃப் (தேசிய விளம்பர தூதர்), நாகார்ஜூனா (ஆந்திரா மற்றும் தெலங்கானா), பிரபு (தமிழ்), சிவராஜ் குமார் (கர்நாடகா), கல்யாணி பிரியதர்ஷினி (கேரளா) இவரும் அணி சேர்ந்துள்ளார்.

அவரது புகழும் ஈர்ப்பும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான வெகுஜன வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இணைவதற்கு உதவுவதுடன், எங்களது பிராண்டை மேலும் வலுப்படுத்தவும் உதவும்" என்றார்.

இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, கல்யாணி ஜூவல்லர்ஸ் உடன் இணைந்து செயல்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப், நாகார்ஜூனா போன்ற மிகவும் மதிப்பு வாய்ந்த பல்வேறு விளம்பரத்தூதர்களின் வரிசையில் நானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸின் சிறப்பான முன்னேற்றத்துக்கான ஒருவராக நானும் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாக கொண்டு, மத்திய ஆசியா வரை பரந்துள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது. வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த நகைகளான - லைலா, போல்கி ஜூவல்லரியான - தேஜஸ்வி, கைவினைத்திறன் கொண்ட பாரம்பரிய நகைகளான - முத்ரா, வைரத்தால் ஆன ஜியா மற்றும் ரங் போன்ற சொந்த தயாரிப்புகளை வழங்குகின்றன.

கல்யாண் ஜூவல்லர்ஸின் நகைகள் மற்றும் சலுகைகள் குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள https://www.kalyanjewellers.net/ என்ற இணையத்தை பார்வையிடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x