

புதுடெல்லி: அங்கீகரிக்கப்படாத முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்கியதற்காக 4 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செயல்படுவதிலிருந்து 6 மாதங்களுக்கு தடைவிதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
செபியின் இந்த தடையை யடுத்து, ஷாஷாங் ஹிர்வானி, கேப்பிடல் ரிசர்ச் அதன் உரிமையாளர் கோபால் குப்தா, கேப்ரெஸ் உரிமையாளர் ராகுல் படேல் உள்ளிட்டோர் கடன்பத்திர சந்தையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டட இந்த நான்கு நிறுவனங்கள் செபியின் பதிவைப் பெறாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வந்தது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.