

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஜேக் டார்சி, நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வரும் பேமெண்ட் நிறுவனமான பிளாக் நிறுவனத்தை கடந்த 2009-ல் நிறுவினார். இந்நிலையில், இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 முதல நியூயார்க் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனமாக வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது பிளாக். இந்த சூழலில் தற்போது ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “பிளாக் நிறுவனம் அசல் பயனர் எண்ணிக்கையை அதிக அளவில் மிகைப்படுத்தி, அதன் வாடிக்கையாளர் செலவுகளைக் குறைத்தும் மதிப்பிட்டுள்ளதாக எங்கள் எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது” என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரியில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அண்மையில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.