‘நாட்டு நாட்டு’-க்கு ஆஸ்கர் இல்லைன்னு சொல்ல முடியாது! - அமுல் பகிர்ந்த டூடுல்

அமுல் டூடுல் | படம்: ட்விட்டர்
அமுல் டூடுல் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

ஆனந்த்: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ‘பெஸ்ட் ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது அமுல் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம். நடப்பு நிகழ்வுகளை வைத்து கார்ட்டூன் வரைந்து விளம்பரமாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது அமுல். அந்த வகையில் ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக தற்போது டூடுல் வெளியிட்டுள்ளது.

அமுலின் ட்ரேட்மார்க் சின்னமான அமுல் பேபி உடன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நிற்பது போல உள்ளது. அதில் ‘நாட்டு நாட்டு-க்கு ஆஸ்கர் இல்லை என சொல்ல முடியாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அமுல் வெண்ணெய் விற்பனை குறித்தும் பிராண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படத்திற்கும் டூடூல் வெளியிட்டிருந்தது அமுல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in