வணிகம்
நேரடி வரி வசூல் 22 சதவீதம் அதிகரிப்பு
புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 10 தேதி வரையில் நேரடி வரி வசூல் 22.58 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக ரூ.16.68 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகி உள்ளது. இதில் ரூ.2.95 லட்சம் கோடி ரீஃபண்டாக வழங்கப்பட்ட நிலையில், நிகர வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடியாக உள்ளது.
நிகர வரி வசூல் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.8 சதவீதமும், ரீபண்ட் 59.44 சதவீதமும் அதிகரித்துள்ளது.
தனி நபர் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வரி ஆகியவை நேரடி வரியின் கீழ் வருபவை ஆகும். நடப்பு நிதி ஆண்டில் தனி நபர் வருமான வரி வசூல் 20 சதவீதமும், நிறுவன வரி வசூல் 13.62 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
