பங்குச்சந்தை | சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிவு 

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிவு 
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 11 புள்ளிகள் உயர்வடைந்து 50,359 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் சரிவடைந்து 17,752 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கி, தொடர்ந்து வீழ்ச்சியில் பயணிக்கத் தொடங்கியது. காலை 09:52 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,184.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.30 புள்ளிகள் சரிந்து 17,724.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான செய்திகளின் கவலை போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா ஸ்டீல், எல் அண்ட் டி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in