பங்குச்சந்தை | சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்ந்து 59,263 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்வடைந்து 17,383 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 359.83 புள்ளிகள் உயர்வடைந்து 59,321.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 77.80 புள்ளிகள் உயர்வடைந்து 17,381.75 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ, ஐடிசி, ஹெச்சிஎல், மாருதி சுசூகி, டிசிஎஸ், இன்டஸ்இந்து பேங்க், டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, கோடாக் மகேந்திரா பேங்க், , என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in