பங்குச்சந்தை | சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 297 புள்ளிகள் உயர்வடைந்து 59,903 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வடைந்து 17,599 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வர்த்தகத்தின் போது லாபத்தில் விற்பனையானாலும் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 81.09 புள்ளிகள் உயர்வடைந்து 59,816.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிவடைந்து 17,545.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. விப்ரோ, ஹெச்டிஎஃபிசி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in