பங்குச்சந்தை | சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவடைந்து 60,382 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் சரிவடைந்து 17,758 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 10:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 536.21 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,136.51 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி157.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,668.85ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் நிலவும் பாதகமான சூழல் காரணமாக சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ஹெவி வெயிட் பங்குகளின் சரிவுகளால் இன்ட்ரா டே வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடர்ந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. எம் அண்ட் எம், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, கோடக் மகேந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பவர்கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in