பங்குச்சந்தை | சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்வடைந்து 61,127 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20 புள்ளிகள் உயர்வடைந்து 17,950 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 110.83 புள்ளிகள் உயர்வடைந்து 61,113.40 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.35 புள்ளிகள் உயர்வடைந்து 17,965.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வார முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. ரிலையன்ஸ் இன்டல்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், விப்ரோ, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்கன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in