மியூச்சுவல் பண்ட்: முன் தேதியிட்ட வரி கிடையாது

மியூச்சுவல் பண்ட்: முன் தேதியிட்ட வரி கிடையாது
Updated on
1 min read

கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வெளியே எடுக்கும்போது 20 சதவீத மூலதன ஆதாய வரி(long-term capital gain tax) செலுத்த வேண்டும் என்று கடந்த 10ம் தேதி பட்ஜெட்டில் ஜேட்லி அறிவித்தார். ஆனால் மியூச்சுவல் பண்ட் துறை முதலீட்டாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இந்த மூலதன ஆதாய வரி ஜூலை 11ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இதற்கு முன்பு வெளியே எடுக்கும்போது 10 சதவீதம் மூலதன ஆதாய வரி செலுத்தினால் போதும். மேலும் 12 மாதங்களுக்கு மேலே வைத்திருந்தாலே நீண்ட கால மூலதன ஆதாய வரியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் கடந்த பட்ஜெட்டில் இந்த காலத்தை 36 மாதங்களாக ஜேட்லி உயர்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in