

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் ரூ.5,208-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.40,992-க்கு விற்பனையானது. மறுநாள் 23-ம் தேதி இது ரூ.40,528 ஆகக் குறைந்தது. பின்னர் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ரூ.40,608 முதல் ரூ.40,688 என்ற விலைக்குள் இருந்தது.
பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.40,840 ஆகவும், 30-ம் தேதி ரூ.40,920 ஆகவும் அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5,208 ஆகவும், பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.41,664 என்ற அளவிலும் விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.75-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.75,000 ஆக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.