சொமேட்டோ இணை நிறுவனர் - சிடிஓ குஞ்சன் பட்டிதார் ராஜினாமா

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

குருகிராம்: சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அலுவலருமான குஞ்சன் பட்டிதார் அந்நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளார். இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது சொமேட்டோ. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் அடிப்படை வளர்ச்சியில் இருந்து குஞ்சன் பட்டிதார் அங்கம் வகித்தவர். இவர் தலைமையில்தான் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப அணி இயங்கி வந்தது.

டெல்லி ஐஐடியில் சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் உடன் இணைந்து படித்தவர் குஞ்சன். அவரது லிங்க்ட்இன் தகவலின்படி கடந்த 14 ஆண்டுகளாக அவர் சொமேட்டோவில் பணியாற்றி வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கடந்த நவம்பர் 2022 முதல் அந்நிறுவனத்தின் மூத்த பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். மோகித் குப்தா, ராகுல், சித்தார்த் ஜவஹர் வரிசையில் இப்போது குஞ்சன் இணைந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in