

புதுடெல்லி: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இபிஎப்ஓ அமைப்பில் கடந்த அக்டோபர் மாதம் 12 லட்சத்து 90 ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 7.2 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். மற்றவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறியவர்கள். புதிய உறுப்பினர்களில் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் 2.2 லட்சம் பேர். 22 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 1.9 லட்சம் பேர். புதிய உறுப்பினர்களில் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 57.2 சதவீதம் பேர்.
கேரளா, ம.பி., ஜார்க்கண்ட் உட்பட இதர மாநிலங்களில் மாதந்தோறும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், டெல்லி மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து அக்டோபர் மாதத்தில் 7.7 லட்சம் பேர் இணைந்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு நிகர எண்ணிக்கையில் 21,026 பேர் அதிகரித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.