

பெங்களூரு: எதிர்வரும் 16-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங் டேஸ் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக வரும் 21-ம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகளவில் ஆஃபர்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனத்தின் சார்பில் அவ்வப்போது பயனர்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் அது பண்டிகை மற்றும் விழா நாட்களில்தான் அதிகம் இருக்கும். ரியல்மி, ஆப்பிள், போக்கோ, விவோ மற்றும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகையில் இதன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேப்லெட், மானிட்டர், பிரிண்டர் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதங்களுக்கு 80 சதவீதம் வரையில் சலுகை கிடைக்கும் எனத் தெரிகிறது. டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 75 சதவீதமும், சில பொருட்களுக்கு குறுகிய கால சலுகையாக நேர அடிப்படையில் இருக்கும் எனத் தெரிகிறது. ஃப்ளிப்கார்ட் பிளஸ் மெம்பர்ஷிப் உறுப்பினர்கள் 15-ம் தேதி முதல் இந்தச் சலுகையை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐபோன் 13 மாடலுக்கான சலுகை விற்பனை குறித்த விவரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சலுகை விற்பனையின்போது ஐபோன்களுக்கு அதிகளவில் சலுகைகள் அறிவிக்கப்படும். அதேபோல் இந்த முறையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.