தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80குறைந்தது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,730-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,840 ஆக இருந்தது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,056-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,000-க்கும் விற்பனையானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in