Published : 02 Oct 2022 04:30 AM
Last Updated : 02 Oct 2022 04:30 AM

60-வது ஆண்டில் மார்கதர்சி சிட் ஃபண்ட் | வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாப்போம் - நிர்வாக இயக்குநர்

சைலஜா கிரண்

சென்னை

மார்கதர்சி சிட் ஃபண்ட் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதில் உறுதியோடு இருப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் தெரிவித்தார்.

மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 1962-ம் ஆண்டில் ஹைதராபாத்தின் ஹிமாயத் நகரில் இந்நிறுவனத்தை ஸ்ரீ ராமோஜி ராவ் தொடங்கினார்.

2 ஊழியர்களுடன் சிறு நிறுவனமாகவே மார்கதரசி சிட் ஃபண்ட் தொடங்கப்பட்டது. இன்று தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு என நான்கு தென் மாநிலங்களில் 108 கிளைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 4,300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 60-வது ஆண்டு நிறைவு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் கூறியதாவது:

வெவ்வேறு பின்புலத்தைக் கொண்ட மக்கள் மார்கதர்சியில் இணைந்து பயன்பெற்றுள்ளனர். அவர்களது கனவுகளும், இலக்குகளும் மார்கதர்சி மூலம் நிறைவேறியுள்ளன.

மக்களின் வாழ்வாதாரத்தை மார்கதர்சி மேம்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் நலன் சார்ந்து ஸ்ரீ ராமோஜி ராவ் உருவாக்கிய விழுமியங்கள் இன்றும் கடைபிடிக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் மீது மிகுந்த அக்கறையை மார்கதர்சி கொண்டிருக்கிறது. அதுவே இந்நிறுவனத்தை வெற்றிப் பாதையில் செலுத்துகிறது. மாத சம்பளதாரர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், பெரிய அளவில் தொழில் நடத்துபவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் தங்கள் சேமிப்புக்கு மார்கதர்சியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதில் உறுதியோடு இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x