

பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து செய்திகளை பொதுமக்களுக்கு அனுப்ப வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களோடு மேலும் நல்லுறவை வளர்க்கும் விதமாக விரைவில் இந்த முயற்சியில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. வரி செலுத்துபவர் களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் விதமாக அவர்களது முக்கிய விசேஷ தினங்களுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்ப உள்ளது.
ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக வரி செலுத்துபவர்களுக்கு தற்போது அனுப்பி வருகிறது.
வரி செலுத்து பவர்களோடு மேலும் உறவை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக குறுஞ்செய்திகள் மூலம் இது போன்ற வாழ்த்து செய்திகளை அனுப்ப வருமான வரித்துறை திட்டமிட்டு வருகிறது.
வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தும் நடைமுறையை எளிமையானதாக உணர வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. அவர்களை ஊக்கப் படுத்தும் விதமான நட வடிக்கைகளை வருமான வரித் துறை எடுத்து வருகிறது என்று வருமான வரித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா செய்தியாளர் களிடம் கூறியது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்து பவர்களிடம் அவர்களது திருமண நாள் குறித்த தகவல்களும் கேட்கப்பட உள்ளன. வரி செலுத்துபவர்கள் விருப்பப்பட்டு குறிப்பிட்டால் வாழ்த்து செய்தி களை அனுப்ப பயன்படுத்துவோம் என்று துறையின் மூத்த அதிகரிகள் குறிப்பிட்டுள்ளனர்.